ரிசர்வ் வங்கியானது பேடிஎம் வங்கிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது RBI.  அதாவது விசா, மாஸ்டர் கார்டு, நெட்வொர்க்கள் மற்றும் சிறிய நிறுவனங்களால் செயல்படும் கார்டுகளுக்கு வணிக பணம் செலுத்துவதை நிறுத்துமாறு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் வணிக விற்பனை நிலையங்களால் செய்யப்படும் பணபரிவர்தனைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது வணிக கார்டுகள் மூலமாக செய்யப்படும் அனைத்து வணிக கட்டணங்களையும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்த உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி எந்தவித சரியான காரணத்தையும் வெளியிடவில்லை. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையால் வாடகை மற்றும் கல்வி கட்டணம் செலுத்துவதில் குழப்பங்கள் ஏற்படலாம்.