பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக தொடர முடிவு செய்துள்ளது. இது ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.