தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திட்டம் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களிலுமே விண்ணப்பபதிவு செய்வதற்காக சிறப்பு மையங்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலேயும்  இந்த திட்டம் குறித்த சந்தேகங்களை பூர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சேலம் மாவட்ட மக்கள் ஏதேனும் சந்தேகங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை எண்.120 தொலைபேசி எண். 0427-2452202, வாட்ஸ் அப் எண் 88254 73639 என்பதை  தொடர்பு கொள்ளலாம். அதே போல வட்டாட்சியர் அலுவலகங்களை பொறுத்தவரை சேலம் – 0427-2452121, சேலம் மேற்கு- 0427-2335611, சேலம் தெற்கு -0427-2271600, ஏற்காடு- 04281-222267, வாழப்பாடி- 04292-223000, பெத்தநாயக்கன் பாளையம் – 04282-221704, ஆத்தூர் – 04282-240704, தலைவாசல் -04282-290907, கெங்கவல்லி – 04282-232300, ஓமலூர் – 04290-220224, காடையாம்பட்டி – 04290-243569, மேட்டூர் – 04298-244050, எடப்பாடி- 04283-222227 மற்றும் சங்ககிரி – 04283-240545 ஆகிய வட்டாட்சியர் அலுவ லகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.