சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக 69.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பெரிய உதவியாக உள்ளது.

இந்த நிலையில் பயணிகள் விரைவாக மெட்ரோ ரயில் நிலையத்தை அடையும் விதமாகவும் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அங்கிருந்து செல்ல ஏதுவாகவும் சென்னையில் முதற்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் உள்ளிட்ட ஐந்து மெட்ரோ நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தேவை மற்றும் சேவைகளின் அடிப்படையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.