நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக  இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கி அமைப்பிற்கு திரும்ப வந்துள்ளது. புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மொத்த 2000 ரூபாய் நோட்டுகளை 87 சதவீதம் அளவிற்கு டெபாசிட்டுகளாகவும், மீதமுள்ள 13 சதவீதம் மற்ற அளவு மற்ற ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதன் காரணமாக புழக்கத்தில் இருந்த கரன்சியின் வளர்ச்சி 8 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.