மனிதர்களாகிய நாம் நம்முடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்திற்காக செலவிடுகிறோம். ஆரோக்கியமாக வாழும் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும். இப்படி ஒரு நிலையில் தூக்கத்திற்கு ஏற்ற சூழல் இருந்தால் தான் நிம்மதியாக தூங்க விட முடியும். அந்த வகையில் நிம்மதியான தூக்கத்தை தரும் மெத்தை வாங்கும்பொழுது ஒரு சில விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும். புதிதாக மெத்தை வாங்குபவர்கள் அதனுடைய அமைப்பு எவ்வாறு இருக்கிறது? என்பதை கவனிக்க வேண்டும். தூங்கும் பொழுது நம்முடைய உடல் முழுவதும் மெத்தை தாங்குகிறது. இதனால் டிஜிட்டல் முறையில் துல்லியமான போம் வெட்டுக்கள் மற்றும் மெத்தையின் விளிம்பு அடுக்குகள் இருப்பது கட்டாயம்.

மெத்தை துணியின் வெப்பநிலையை கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பது அவசியம். நல்ல தூக்கம் வரவேண்டும் என நினைப்பவர்கள் வெப்பத்தை வெளியிடும் வகையில் மட்டும் இருக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டும். மெத்தை வாங்கும் பொழுது எளிதாக தூங்க வைக்குமா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். பணத்திற்காக யோசித்து  லோக்கல் பிராண்டுகளை வாங்குவதை தவிர்த்து பணம் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்று ஒரே தடவையில் னால மெத்தையை வாங்க வேண்டும்.