புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், CM ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தனர்.

இதன் பின் பேசிய தமிழிசை, புதுச்சேரி அரசு அறிவிக்காததை செயல்படுத்துகிறது. சில அரசுகள் அறிவித்தும் செயல்படுத்துவதில்லை என தமிழ்நாடு அரசை மறைமுகமாக அவர் சாடியுள்ளார். புதுச்சேரியில் வழங்கப்பட்டதால் தமிழகத்திலும் விரைவில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.