இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல தரப்பிலிருந்து மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்கள் வழங்கபட்டாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது மருத்துவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து தற்கொலை மோசடி அரங்கேற தொடங்கியுள்ளது. நேர்காணல் எனும் பெயரில் வீடியோ காலில் அழைத்து பெண் ஒருவர் பேசுவார்.

சில நிமிடங்களில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறி காவலர் பேசுவது போல மோசடி கும்பல் மிரட்டி பணம் பறித்து வருகிறார்கள். இதில் பாதிக்கப்பட்ட இரண்டு மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடியில் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.