வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திற்கான கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள பிளஸ் ஒன் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் எண்பது சதவீதத்திற்கு அதிகமாக மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60% மதிப்பெண் பெற்று இருந்தால் போதும். இதில் தகுதியுடைய தமிழக மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் www.vidyadhan.org என்ற இணையதளத்தில் ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூடுதல் விவரங்களை அறிய 9663517131 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.