காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்திய பட்ஜெட் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ராகுல்காந்தி, இந்தியாவின் ஒற்றுமை நடைப்பயணத்தின்போது நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களைப் பாதித்துள்ள பிரச்னைகளை உணர்ந்ததாக கூறினார்.

அதோடு பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்னைகளில் பிரதமர் கவலைப்படவில்லை எனவும் தனது நண்பரின் தொழில் மற்றும் முன்னேற்றத்தில் மட்டும்தான் அக்கறை காட்டுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மறைமுகமாக விமர்சித்து உள்ளார். அதுமட்டுமின்றி பிரதமரே தற்போது உங்கள் நண்பரின் பாக்கெட்டை நிரப்புவதை நிறுத்தி விட்டு நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள் என்று ராகுல்காந்தி  கூறியுள்ளார்.