2023 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெற்றது. இதில் அதானியின்  விவகாரத்தினால் பாராளுமன்றத்தின் அவைகளை எதிர்க்கட்சிகள் முடக்கின.

இந்த நிலையில் இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 11 ஆம்  தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். அவற்றுள் குறிப்பாக மணிப்பூர் கலவரம் விவகாரம் பற்றி பேச காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.