முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி 2006 ஆம் வருடத்திற்கு பிறகு கடந்த 2018 ஆம் வருடம் குடமுழுக்கு நடந்திருக்க வேண்டும்.

ஆனால் நடக்கவில்லை. இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி கோவிலின் குடமுழுக்கு இந்த வருடம் நடத்த கோவில் அறங்காவலர் குழு முடிவு செய்ததால் குடமுழுக்கு பணிகள் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஜனவரி27 ஆம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 51,295 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 2,000 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பக்தர்களுக்கு இன்று வரை அனுமதி சீட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், வெளியூர் பக்தர்களின் வசதிக்காக ஜன..26(இன்று) இரவு 11. மணி அனுமதி சீட்டை பெறலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.