மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் இருந்து மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்க இருக்கிறது. இந்த சிறப்பு ரயில் சேவை கோடைகால விடுமுறையை ஒட்டி தொடங்குவதாக மேற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் 18,25, மே 2, 9,16, 23, 30, ஜூன் 6,13, 20, 27, ஜூலை 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை தோறும் மாலை 4.25 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சனிக்கிழமை அதிகாலை 12:15 மணிக்கு மதுரையை வந்தடையும்.

இதேபோன்று மறு மார்க்கத்தில் மதுரையிலிருந்து ஏப்ரல் 20, 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29, ஜூலை 6,13,20,27 ஆகிய தேதிகளில் சனிக்கிழமை தோறும் இரவு 11:35 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திங்கட்கிழமை காலை 7:40 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும். மேலும் இந்த சிறப்பு ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, பலார்ஷா, நக்பிர், கோன்டியா, பாலக்காட், நயின்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.