இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில்  ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் வந்தே பார்த் ரயில்கள் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிலையில் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கான டிக்கெட்டுகள் தற்போதே முன்பதிவு ஆகிவிட்டன. குறிப்பாக நவ.12 மற்றும் ஜன. 12, 13ம் தேதிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனிடையே, ரயில் டிக்கெட் விலையை குறைக்கவும், கூடுதல் ரயில்களை இயக்கவும் மகக்ள் கோரிக்கை விடுத்துள்ளனர்