இந்தியாவின் வரலாற்று வெற்றியை  சமீபத்தில் சந்திரயான் 3 பதிவு செய்தது. விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்தது. சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை தொடர்ந்து, நிலவில் Luna Earths Moon, Tract 55 Parcel 10772 என்ற இடத்தை ஜம்முவை சேர்ந்த தொழிலதிபர் ரூபேஷ் மாசூன் என்பவர் வாங்கியுள்ளார். நியூயார்க்கில் உள்ள தி லூனார் ரெஜிஸ்ட்ரி மூலமாக கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நிலத்தை ரூபேஷ் பதிவு செய்துள்ளார்.