பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 50 கோடி லிட்டர் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் 6900 ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. நாள் ஒன்றுக்கு 260 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் காவிரி மூலம் 147 கோடி லிட்டர், ஆழ்துளை கிணறுகள் மூலம் 65 கோடி லிட்டர் தண்ணீரும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.