தமிழகத்தில் காய்கறி, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடைய விலை ஏற்றத்துக்கு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்து வரும் நிலையில் மேலும் 300 ரேஷன் கடையில் தக்காளி விற்பனையை  விரிவுபடுத்த தமிழக அரசானது முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 300 நியாயவிலை கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். விலை உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் நலன் கருதி நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முதல்வர் உத்தரவிட்டார். ஏற்கனவே சென்னையில் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 300 கடைகளில் தக்காளி விற்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.