தன் பாலின திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் ஒரே பாலின திருமணம் என்பது நாட்டின் சமூக நெறிமுறைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு “நகர்ப்புற உயரடுக்கின் கருத்து” என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதன் சட்ட அங்கீகாரம் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியது. இந்த மனுக்கள் “தொலைநோக்கு தாக்கங்களை” கொண்டிருப்பதாகவும், நாட்டின் அனைத்து மக்களின் பார்வையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அரசாங்கம் கூறியது.