கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  மாநிலத் தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு , பாராளுமன்ற தேர்தலில் 10% வாக்குப்பதிவு உறுதி செய்ய தேர்தல் அலுவலகம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் பாதுகாப்பு பணியில் ஏற்கனவே மூன்று துணை ராணுவ படையினர் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். வருகிற தேர்தலில் முறைகேடாக பண பட்டுவாடா செய்வதை தடுக்க வங்கிகளுக்கு அறிவுரை வழங்க ப்பட்டுள்ளது.

பணம் கொடுப்பது போன்று முறைகளில் ஈடுபட்டால் அவற்றை பொதுமக்களை நேரடியாக புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலி உள்ளது.  அதில் புகார் அளிக்கலாம். மேலும் வயதானவர்கள் இந்த தேர்தலில் சிரமம் இல்லாமல் வாக்களிப்பதற்கு சக்சம் என்ற செய்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலமாக தேர்தல் அதிகாரி வீட்டிற்கு சென்று நேரடியாக வாக்குகளை பெற முடியும் என்று கூறினார்.