பிஎஸ்சி நர்சிங், பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்த படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. ஜூன் 28ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பிறகு துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கும். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள் இந்த படிப்புகளில் சேர்வார்கள் என்பதால் இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.