தமிழகத்தில் தாமதமாக விண்ணப்பித்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை தாமதமாக பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்க வேண்டும். மேலும் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த பதிவுகள் இருந்தால்தான் சான்றிதழை அளிக்க முடியும்.

இந்த விண்ணப்பத்துடன் ஆவணங்களாக மதிப்பெண் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் ஆகிய சான்றுகளை வழங்க வேண்டும். விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் நினைத்து சுய உறுதிமொழியிட்ட கடிதத்தையும் விண்ணப்பதாரர் வழங்க வேண்டும். வட்டாட்சியர் தனது அறிக்கையை வருவாய் கோட்டாட்சியருக்கு இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் விண்ணப்பம் பெறப்பட்ட 60 நாட்களுக்குள் அதன் மீது உரிய உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.