பசுபதிபாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தால் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், கொலை தொடர்பாக சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நவீன் பெயர் இடம்பெறவில்லை.

இதனால், அவர் கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என்று கேள்வி எழுந்துள்ளது. சக மனிதனை படுகொலை செய்யும் சாதி வெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக எஸ்சி, எஸ்டி சட்டத்தில் உடனடியாக கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.