தமிழகத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அப்போது ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் சிகிச்சை பலனின்றி பலரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் ஊழியர்களின் வாரிசுதாரருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து 25 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும் என கூட்டுறவு துறை அறிவித்தது.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மண்டலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது. இதற்காக கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் ஊழியர்களின் விவரங்களை வருகின்ற மார்ச் 15ஆம் தேதிக்குள் மண்டலினை பதிவாளர்கள் அனுப்ப வேண்டும் என்றும் இதுபோன்ற கால அவகாசம் இனிமேல் வழங்கப்படாது எனவும் கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.