தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய வசதிகளையும் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோடு பேமெண்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 602 ரேஷன் கடைகளில் இந்த திட்டத்தை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இது படிப்படியாக தமிழகம் முழுவதிலும் உள்ள கடைகளுக்கு விரிவு படுத்தப்பட உள்ளது. டிஜிட்டல் மயமாக்களின் ஒரு பகுதியாக ரேஷன் கடைகளும் டிஜிட்டல் பேமென்ட் வசதிக்கு மாறி வருகின்றன.