தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இங்கு விமானம் இயக்குவதற்கு அனுமதி கிடைத்த பிறகு வேலூரில் விமான சேவை தொடங்கப்படும் எனவும் அவ்வாறு தொடங்கிவிட்டால் பெங்களூரு , சென்னை செல்ல வெறும் 4 மணி நேரம் மட்டுமே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் 19 முதல் 78 நபர்கள் அமரக்கூடியதாக இருக்கும். 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டும் இந்த 2500 ரூபாய் சலுகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தஞ்சாவூரிலும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதனைப் போலவே நெய்வேலியில் இருந்தும் சென்னைக்கு சிறுக விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் விமான சேவை தொடங்கப்படுவதால் இது தமிழகத்தில் பெரும் வளர்ச்சியை பெற்று தரும் என்று கூறப்படுகிறது.