தமிழகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் ஜாதிய பாகுபாடு தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. 36 மாவட்டங்களில் உள்ள 441 பள்ளிகளில் 644 மாணவர்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஆசிரியர்கள் இடையே தீண்டாமை பார்ப்பது, தலித் மாணவரை தொடாமல் இருப்பது, தலித் மாணவர்களுக்கு தண்டனை அதிகம் தருவது உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட பள்ளியில் தலித் மாணவர்களை மட்டும் ஆசிரியர் தொட மறுக்கிறார் என்பது அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.