தமிழகத்தில் கோவில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிக்க கூடாது என்ற தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கோவில்களின் பாதுகாப்பு குறித்த சில உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதனை ஆராய்ந்த நீதிமன்றம் அறங்காவலராக நியமிக்கப்படுபவர் பக்தராக இருக்க வேண்டும் எனவும் அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நியமிக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் கோவில் ஊழியர்களுக்கு Minimum Wage Act ஐ அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.