இந்தியாவில் IIT, NIT போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர JEE என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகின்றது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி விகிதமும் மிக குறைவாகவே உள்ளது. இதனை கருதி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜெஈ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பயிற்சி திட்டம் நேற்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டு அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 3600 மாணவர்கள் JEE தேர்வு எழுதியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். அதில் 274 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மூலமாக 45 நாட்கள் JEE தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.