தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. அதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் காவல்துறையில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் விலையில் மது விற்கும் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.