தமிழகத்தில் பள்ளி பேருந்துகள் அரசின் போக்குவரத்தை விதிகளுக்கு உட்பட்டு முறையான தகுதி சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். அதன்படி இந்த வருடம் மாவட்ட வாரியாக பள்ளி பேருந்துகளில் மூன்று கட்டங்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது.

இதன் மூலமாக விதிகளுக்கு உட்படாத பேருந்துகள் மற்றும் குறைபாடுகள் உடைய பேருந்துகள் கண்டறியப்பட்டு வருகின்றன. வருகின்ற ஜூன் 5-ம் தேதி வரை இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதுவரை ஆய்வுக்கு வராத பேருந்துகளை பள்ளிகள் திறப்பின் போது கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசின் தகுதி சான்றிதழை பெறாமல் பள்ளி பேருந்துகள் இயக்கப்பட்டால் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.