தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை இருவர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு தம்பதி உயிரிழந்தனர். தற்போது 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் நலமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 10 பேரும் எத்தனால் மற்றும் எத்தனால் கலந்த கல்ல சாராயத்தை அருந்தி இருக்கலாம் என்றும் இது தொடர்பாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் பெற்ற 136 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ள சாராயத்தை ஒழிக்க போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து இரவோடு இரவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. திண்டிவனம் மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.