தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தினமும் லட்சக்கணக்கானோர் சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சைகளுக்காக வந்து செல்கிறார்கள். ஆனால் அங்கு வசதிகள் குறைபாடு மற்றும் சிகிச்சை தாமதம் என பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் விதமாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகார் பெட்டியை அமைத்து பராமரிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உரிய நேரத்தில் அதன் மீது நடவடிக்கை எடுத்து குறைகளை அவசியம் தீர்க்க வேண்டும் என்றும் புகார் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறது என்பதை மாவட்ட துணை சுகாதார இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.