தமிழகம் முழுவதும் சுமார் 5329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதன் மூலமாக அரசுக்கு தினந்தோறும் 1.3 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கின்றது. இதனிடையே மது கடைகளை மூட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த நிலையில் இதனை கருதி 500 மது கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் 500 மது கடைகளை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநிலத்தில் தினசரி ஒரு லட்சத்திற்கும் குறைவாக மது விற்பனை நடைபெறும் கடைகளை கண்டறியும் பணி தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் அதிக புகார்கள் வரக்கூடிய மதுபான கடைகள் குறித்த விவரங்களும் கேட்டரியப்பட்டு வருகிறது. கோவில்களுக்கு அருகில் உள்ள மதுபான கடைகள் மற்றும் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால் அதனை அடிப்படையாகக் கொண்டு மது கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.