தமிழகத்தில் ஏற்கனவே மஞ்சள் பைத்திட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த திட்டம் மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை குறைப்பதற்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத் தவிர மற்ற பொருள்கள் மூலமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நெகிழி கப், டம்ளர், நெகிழி கரண்டி மற்றும் சுத்தி உள்ளிட்ட 19 பொருள்கள் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை இயற்கை சூழல் பாதிக்காமல் இருக்கவும் பொது சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுப்பதற்கும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த புதிய தடை உத்தரவு தமிழகம் முழுவதும் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் மஞ்சள் பை திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் அதே அளவிற்கு இந்த தடை அமல் சட்டத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.