தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு எழுதிய உதவித்தொகை பெறும் வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் இடம்பெறுவர். இவர்களுக்கு ஒரு கல்வியாண்டில் தலா பத்தாயிரம் ரூபாய் அதாவது ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடிக்கும் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு எழுத விரும்பும் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து திறனாய்வு தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திறனாய்வு தேர்வு செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.