தமிழகத்தில் சென்னியில் கடந்த 2000 வருடம் டைட்டில் பார்க் உருவாக்கப்பட்ட பிறகு தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் வளர்ச்சியானது அபரிதமாக இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து சென்னையில் ஏகப்பட்ட it நிறுவனங்கள், மென்பொருள் உற்பத்தி ஏற்றுமதி, புதிய தொழில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது . அந்த வகையில் தற்போது சென்னையில் வெளிவட்ட சாலையின் கிழக்கு பகுதியான மண்ணிவாக்கம், மலையம்பாக்கம், வண்டலூர் போன்ற பகுதிகளில் மூன்று தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது.

இதற்காக நிலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த மூன்று புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவையும் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதன் மூலமாக சென்னையில் கிட்டத்தட்ட 5000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.