தமிழக போக்குவரத்து துறையில் புதிதாக பேருந்துகளை வாங்குவதற்கு அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி 600 தாழ்வான உள்ளூர் பேருந்துகள் மற்றும் 800 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1400 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மோசமான நிலையில் உள்ள பேருந்துகளை உடனடியாக மாற்ற வேண்டிய தேவை நிலவுகிறது. பீக் ஹவர்களின் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

இதை சமாளிக்க பேருந்து எண்ணிக்கை போதவில்லை என்பதால் ஆட்டோ மற்றும் மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் பயன்படுத்தி வருகின்றன. எனவே பொதுமக்களின் தினசரி தேவையை புரிந்து கொண்டு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இந்நிலையில் ஆயிரம் பழைய பேருந்துகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் புதிதாக 1400 பேருந்துகளை வாங்கவும் அரசு தற்போது களமிறங்கியுள்ளது.