தமிழகத்தில் ஓவியர்கள் பயன்படுத்தும் தூரிகைகளை தயாரிப்பதற்காக அதிகளவில் கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுவதாக தமிழக  அரசின் வனத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். 1 கிலோ கீரி முடியை சேகரிக்க சுமார் 50 கீரிப்பிள்ளைகள் வேட்டையாடப்படுவதாக கூறியுள்ளாார். கீ

ரிப்பிள்ளையை கொல்வது இந்த வனவிலங்கு சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டியலிடப்பட்ட வன விலங்கினங்களின் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட தொடர் நடவடிக்கையில், வியாபாரிகளிடமிருந்து சுமார் 10000-க்கும் மேற்பட்ட கீரிப்பிள்ளை முடிகளால் செய்யப்பட்ட தூரிகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.