தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக வட உள் மாவட்டங்களான கரூர், ஈரோடு, திருப்பூர், சேலம், காஞ்சிபுரம், நாமக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

அதன் பிறகு தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் இன்று முதல் மே 10-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி முதல் 7 டிகிரி வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.