தமிழகத்தில் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர். ஆனால் ஒரு சில பேருந்துகளில் கட்டணம் அதிகமாக உள்ளதால் ஏழை எளிய மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் அரசு பெண்களுக்கு இலவசமாக பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தோம் அது பல இடங்களுக்கு பொருந்தவில்லை. அதாவது வால்பாறை மற்றும் பொள்ளாச்சி அடைய இயக்கப்படும் அரசு பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம் மற்றும் கேரளா மன்னார்காடு ஆகிய வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவல் நிலையில் இந்த பேருந்துகளில் 64 ரூபாய் கட்டணம் ஆக வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்த கட்டடம் 48 ரூபாயாக குறைக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.