1947 ஆம் வருடம் ஜூலை மாதம் 22ஆம் தேதி தேசியக்கொடி தற்போதைய வடிவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய தேசிய கொடி நம் நாட்டின் தேச பக்தி மற்றும் சுதந்திரத்தின் சின்னமாகும் . 1916 ஆம் ஆண்டு பெங்காளி வெங்கையா எல்லாருக்கும் பொதுவான ஒரு கொடியை உருவாக்கினார். காவி, வெள்ளை, பச்சை என மூவர்ண கொடியில் காவி நிறம் பலத்தையும் தைரியத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியை காட்டுகிறது. பச்சை நிறம் வளர்ச்சி பசுமை மற்றும் விவசாய செழிப்பை காட்டுகிறது. தேசிய கொடியின் நடுவில் இருக்கும் அசோக சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிக்கிறது. நமது தற்போதைய தேசிய கொடி ஏற்றுக் கொள்ளப்பட்ட இன்றைய தினத்தில் எந்த இடத்திலும் தேசிய கொடியை அவமதிக்கும்படி நடந்து கொள்ள மாட்டோம் என்றும் அதற்கு உண்டான மரியாதையை முறையே கொடுப்போம் என்றும் உறுதி ஏற்போம்.