கரூர் வைசியா வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களுக்கான நிதி செயல்பாடுகளில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. அதன்படி கடந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி பேலன்ஸ் சீட் அளவு ரூ. 83,013 கோடியாக இருக்கிறது. இது முந்தைய வருடத்தை காட்டிலும் 14.7 சதவீத வளர்ச்சியாகும். அதன் பிறகு கடந்த வருடம் வங்கியின் மொத்த வர்த்தக அளவு ரூ. 1,39,062 கோடியாக அதிகரித்துள்ளது.

இது முந்தைய வருடத்தை காட்டிலும் 13.4 சதவீதம் அதிக வளர்ச்சியாகும். இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நிகர லாபம் கடந்த வருடத்தை விட 67% வலுவான வளர்ச்சியை பெற்று ரூ. 768 கோடியாக பதிவாகி இருக்கிறது. இதேபோன்று நிகர வட்டி வருவாய் 22.5 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 2,456 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும் இதேபோன்று பல்வேறு பிரிவுகளிலும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ள கரூர் வைசியா வங்கியின் கிளைகள் 54 சதவீதம் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இயங்கி வருகிறது.