நாடு முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல்வேறு முக்கிய நகரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் பேசு பொருளாக மாறின. ஏனெனில் விமானத்தில் இருப்பது போன்ற சிறிய அதிர்வுகள்  கூட இல்லாத வகையில் சொகுசான அனுபவத்தை தருவதாக பயணிகள் கூறியுள்ளனர். இந்த வசதிகளில் மிக முக்கியமானது நவீன சென்சார்கள். சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் தனியிடம் கிடைக்காத என்று தேடுவது  உண்டு.

பொது இடங்களில் சிகரெட் புகைக்கக் கூடாது என்று அரசு அறிவுறுத்திய போதிலும் ஒரு சிலர் மறைவாக சிகரெட் பிடித்து வருகிறார்கள். இது போன்ற சமயங்களில் பெரிய சண்டையில் போய் முடிந்து விடுகிறது. இது போன்ற பிரச்சனையை தவிர்க்கும் விதமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. ரயிலில்  சிகரெட் பிடித்தால் வரும் புகையை சென்ஸார்கள் கண்டறிந்து அலாரம் அடித்து விடும். உடனே ரயில்வே போலீசார் மூலம் புகை பிடிப்பது தடுத்து நிறுத்தப்படும். ஒருவேளை சிக்கல் பெரிதானால்  சம்பந்தப்பட்ட நபர் ரயிலில் இருந்து வெளியேற்றப்படுவார்.