கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கான காரணம் வெளியாகி உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1.60 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.6 கோடி விண்ணப்பங்கள் தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது.  2.5  லட்சத்திற்கு மேல் குடும்ப வருமானம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுக்கு 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோரின் விண்ணப்பங்களும் நிராகரிப்பு எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்பவரின் விண்ணப்பங்களும் நிராகரிப்பு என தகவல்வெளியாகியுள்ளது. அரசு பணியில் இருப்பவர் மற்றும் அவர்களது குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்களும் நிராகரிப்பு என தகவல் வெளியாகி உள்ளது. விண்ணப்ப நிராகரிப்புக்கான காரணம் செப்டம்பர் 15 இல் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.