கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகள் என்எல்சி நிறுவனம் சார்பில் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் புதிதாக தோண்டப்படும் கால்வாய்க்கு தேவைப்படும் நிலத்தை தவிர மற்ற நிலங்களை செப்டம்பர் 15 வரை சேதப்படுத்தக்கூடாது என இன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கெனவே கால்வாய் பணிக்காக சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். செப்டம்பர் 15க்கு பிறகு பயிரிட மாட்டோம் என விவசாயிகள் உத்தரவாதம் தர வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.