வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆனது சென்னை டு மைசூர் முதல் ரயில் சேவையானது நவம்பர் 19 2022 இல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை டு கோவை இடையே ஏப்ரல் 8 2023 பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இரண்டு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகி மூன்று ரயில் நிலையங்களில் மட்டும் ரயில் நின்று செல்லும். காலை 6:00 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நண்பர்கள் 11.50 மணிக்கு சென்னை வந்தடையும். இங்கிருந்து 2.25 மணிக்கு புறப்படும் ரயில் 8.15 மணிக்கு கோவையை சென்றடைகிறது.

கட்டணத்தைப் பொறுத்தவரை சென்னை – கோவைக் செல்ல, ஏசி சேர் கார் 1365 எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் 2,485 ரூபாய். கோவை – சென்னை ஏசி சேர் கார் 1,215 எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் 2310 கட்டணம். அதாவது இரண்டு மார்க்கங்களில் கட்டணம் மாறுபடுகிறது. பயண தூரம் ஒரே மாதிரி இருக்கையில் ஏன் கட்டணம் வேறுபடுகிறது என்ற கேள்விக்கு தெற்கு ரயில்வே அளித்துள்ள விளக்கத்தில், கோவை டு சென்னை வந்தே பரத் எக்ஸ்பிரஸ்சில் தேநீர், செய்தித்தாள், சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படுகிறது. இதனை ஒட்டி கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இரண்டிற்கும் வேறுபாடு என்னவென்றால் உணவு கட்டணம் மட்டும் தான் என்று கூறியுள்ளனர்.