தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள்? என்னென்ன ஆவணங்கள் தேவை? யாருக்கெல்லாம் கிடையாது? என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. இந்த நிலையில் மகளிருக்கான 1000 கொடுக்கும் பணிக்கு விண்ணபங்களை பூர்த்தி செய்ய டோக்கன் முறை பயன்படுத்தப்படும் என்று சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 3ஆவது வாரம் முதல் தன்னார்வலர்கள் மூலம் முகாம் அமைத்து விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. அப்போது கூட்டம் சேராமல் இருக்க டோக்கன் வழங்கப்பட இருக்கிறது. இதேபோன்ற முறை அனைத்து பெரு நகரங்களிலும் பின்பற்றப்படும் என்று தெரிகிறது.