சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பலரும் ஏராளமான மாணவர்கள் வெற்றியடைந்த நிலையில் ஒருசிலர் தோல்வியடைந்துள்ளனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த SC, ST பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத உதவும் வகையில் சிறப்பு வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பழங்குடியினர் நலப் பள்ளி மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேரும் வகையில் இந்நடவடிக்கையை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க உதவுமாறு ஆசிரியர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.