தெலுங்கானா மாநிலம் மகாபூபாபாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கேசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுனிதா என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு ஜான்டிஸ் பாதிப்பு இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் குழந்தையை வைத்திருந்தனர். அதேபோன்று சென்னாரோபேட் பகுதியை சேர்ந்த சுமித்ரா என்ற பெண்ணிற்கு அதே மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளது.

இந்நிலையில் தாய்மார்கள் குழந்தையை பார்க்க அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அப்போது சுனிதாவின் பெண் குழந்தை சுமித்ராவிடமும் சுமித்ராவின் ஆண் குழந்தை சுனிதாவிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மருத்துவர் தலையிட்டு இரண்டு தாய்மார்களின் பெயர் குழப்பத்தில் குழந்தை மாறிவிட்டது என்று இரண்டு குடும்பத்தினரிடமும் பேசி சமாதானப்படுத்தியுள்ளார். மேலும் இனிவரும் காலத்தில் இது போன்ற தவறு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.