தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை சேவை கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், புதிய வீடுகளின் கட்டுமானத்தையும் இது பாதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டண உயர்வால் வீடுகளின் விலை 3 முதல் 5 சதவிகிதம் வரை உயரும் என கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

ரூ.30 லட்சத்துக்கு வீடு கட்டும் போது ரூ.1 லட்சம் முதல் 3 லட்சம் வரை கூடுதல் செலவாகும். இது நேரடியாக புதிய வீடு கட்டும் உரிமையாளர்களை பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில்  பேரிடியாக அமைந்துள்ளது.